மத்திய அரசு பணிக்கான போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி


மத்திய அரசு பணிக்கான போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி
x

மத்திய அரசு பணிக்கான போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சிஅளிக்கப்படுகிறது.

திருச்சி

மத்திய அரசு பணிக்கான போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது.

போட்டி தேர்வுகள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டித்தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. அதன்படி தற்போது உதவி தணிக்கை அதிகாரி, உதவி கணக்கு அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, தணிக்கையாளர், ஆய்வாளர், வருமான வரித்துறை ஆய்வாளர் உள்ளிட்ட 7,500 பணியிடங்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு அளவிலான சார்நிலை தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்த 3-ந்தேதி வெளிவந்துள்ளது.

இளங்கலை பட்டப்படிப்பு கல்வித்தகுதி உடைய வேலைநாடும் இளைஞர்கள் இணைய வழியில் www.ssc.nic.in என்ற இணைய தளத்தில் வருகிற 5-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த போட்டி தேர்வுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகிற 20-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

தொழில்நெறி வழிகாட்டும் மையம்

இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள திருச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டித்தேர்வுக்கு தயாராகும் வேலைநாடுநர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு பயனடையுமாறும் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story