போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கட்டணம் இல்லாத பயிற்சி
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அரசால் அறிவிக்கப்படும் அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் கட்டணம் இல்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் 2023-2024-ம் ஆண்டிற்கான ஆண்டு திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆகஸ்டு மாதம் குரூப்-1 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போட்டி தேர்வு தொடர்பாக விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக நேரடியாக இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு தொடர்பான இலவச பயிற்சி தேர்வுகள் வாரந்தோறும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
தேர்வு புத்தகம்
பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் தேர்வுக்கான புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். முதலில் வருகை புரியும் 100 நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் டெலிகிராம், மின்னஞ்சல், நேரில் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.