டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படுகிறது. இங்கு மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு பணிகளுக்கு நடத்தப்படும் போட்டி தோ்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் திறமையான வல்லுனர்களை கொண்டு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. எனவே குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் நேரில் சென்று பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story