சிறைகாவலர், தீயணைப்பாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி
சிறைகாவலர், தீயணைப்பாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி நாளை நடக்கிறது என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சிறைகாவலர், தீயணைப்பாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி நாளை நடக்கிறது என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தேர்வு அறிவிப்பு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2-ம் நிலை போலீசார், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தேர்வுக்கான கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் அதற்கு சமமான கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியிடங்கள் 3,359 ஆகும்.
இந்த தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 17 ஆகும். இதற்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச பயிற்சி
இந்த போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க இணைய வழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
பாட குறிப்புகள்
பாடக்குறிப்புக்கள் இலவசமாக வழங்கப்படும். மேலும் வாராந்திர, மாதிரி தேர்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படும். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இலவச பயிற்சிக்கான இணையதளத்தில் அனைத்து விதமான போட்டி தேர்வுக்கு பாட குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் டெலிகிராம், மின்னஞ்சல் அல்லது நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.