விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்று


விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்று
x

செங்கோட்டையில் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்கப்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை வட்டாரம் இலத்தூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் நல்லமுத்துராஜா தலைமை தாங்கினார். துணை வேளாண்மை அலுவலர் ஷேக்முகைதீன் முன்னிலை வகித்தார். கால்நடை மருத்துவர் சிவகுமார், கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை நடத்தினார். இதில் 60-க்கும் மேற்பட்ட மாடு, ஆடுகளுக்கு கிருமி நீக்க மருந்து கொடுக்கப்பட்டது. மேலும் கறவை மாடுகளுக்கு சத்து மருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 50 வேளாண் குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் அருணாச்சலம் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சம்சுதீன் மற்றும் சிவகுமார், உதவி தோட்டக்கலை அலுவலர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story