விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள்
கடையம் அருகே விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
கடையம்:
கடையம் வட்டாரம் சேவைக்காரன்பட்டி ஊராட்சியில் வேளாண்மை -உழவர் நலத்துறை சார்பில் 2022-2023-ம் ஆண்டு கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்-அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 300 விவசாயிகளுக்கு ஒரு விவசாயிக்கு 2 இலவச தென்னங்கன்றுகள் வீதம் ெமாத்தம் 600 தென்னங்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் முதல்கட்டமாக 120 விவசாயிகளுக்கு 240 இலவச தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தலைமையில் நடைபெற்றது. கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள், ஒன்றிய கவுன்சிலர் புளிகணேசன், ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து தென்னங்கன்றுகளை வழங்கினர். வேளாண்மை அலுவலர் அபிராமி தென்னங்கன்றுகளை நடவு செய்யும் முறை மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமாக கூறினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராசம்மாள், வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற செயலாளர் கதிரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கடையம் வட்டாரத்தில் கலைஞர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள தெற்குகடையம், ரவணசமுத்திரம், வீராசமுத்திரம், அடைச்சாணி ஊராட்சிகளிலும் முதல் கட்டமாக இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.