30-ந் தேதி வரை மட்டுமே இலவச கொரோனா தடுப்பூசி


30-ந் தேதி வரை மட்டுமே இலவச கொரோனா தடுப்பூசி
x

30-ந் தேதி வரை மட்டுமே இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கலெக்டர் கூறியுள்ளார்.

கடலூர்

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டத்தில் 36-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுமார் 3,742 இடங்களில் நடைபெற உள்ளது. மேலும் 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவருக்கும் வருகிற 30-ந் தேதி வரை மட்டுமே இலவசமாக கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படாது. தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது 12 லட்சத்து 72 ஆயிரம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திட வேண்டியுள்ளது. அதனால் அவர்கள் இந்த இலவச தடுப்பூசி முகாமை பயன்படுத்தி, தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். அதாவது பொதுமக்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து தங்களது வீட்டின் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story