அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பல் சிகிச்சை முகாம்


அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பல் சிகிச்சை முகாம்
x

ஆரணி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பல் சிகிச்சை முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணிடிய அடுத்த அக்ராபாளையம், அடையபலம் ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு டி.வி.எஸ். நிறுவனத்தை சார்ந்த ஆரணி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மற்றும் சென்னை சவீதா பல் மருத்துவமனை இணைந்து பல் சிகிச்சை முகாம் நடந்தது.

முகாமில் சுமார் 750 மாணவ-மாணவிகளுக்கு பல் பரிசோதனை செய்யப்பட்டு, முறையாக பல் துலக்குவது பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

மேலும் 180 மாணவர்களுக்கு, பல் சுத்தம் செய்தல் சொத்தை பல் அடைத்தல் போன்ற சிகிச்சைகள் இலவசமாக வழங்கினர்.

முகாமில் அக்ராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தாட்சாயினி அன்பழகன், அடையபலம் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார், ஆரணி வட்டார கல்வி அலுவலர் கமலக்கண்ணன், கல்விக்குழு தலைவர் ராஜேஸ்வரி,

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வேலு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயேந்திரர், நிர்வாகி வேண்டா முருகன், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் கள இயக்குனர் அகிலன், சமுதாய வளர்ச்சி அலுவலர் கோபி, கிராம வளர்ச்சி அதிகாரிகள், பல் மருத்துவர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story