சோலை மர நாற்றுகள் இலவசமாக வினியோகம்


சோலை மர நாற்றுகள் இலவசமாக வினியோகம்
x

சோலை மர நாற்றுகள் இலவசமாக வினியோகம்

நீலகிரி

கோத்தகிரி

கட்டபெட்டு வனச்சரகத்தில் 'பசுமை தமிழ்நாடு' திட்டம் தொடங்கப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் வனச்சரகர் செல்வகுமார் பேசியதாவது:-

தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி உள்ளது. கட்டபெட்டு அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட சோலை மர நாற்றுக்களை வனத்துறையினர் நடவு செய்தனர். மேலும் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் மரக்கன்றுகளை நடும் வகையில் சில்வர் ஓக் மற்றும் சோலை மர நாற்றுக்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் விண்ணப்பத்துடன், தங்களது நிலம் சம்பந்தமான சிட்டா நகலை பெட்டட்டியில் உள்ள கட்டபெட்டு வனச்சரக அலுவலகத்தில் சமர்பித்து நாற்றுக்களை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story