இலவச கண் பரிசோதனை முகாம்
இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது
மதுரை
வாடிப்பட்டி
மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் வாடிப்பட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாள் விழாவையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் தாதம்பட்டி மந்தை திடலில் நடந்தது. முகாமிற்கு வட்டாரத் தலைவர் பாலசரவணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் கராத்தே சிவா, கச்சைகட்டி பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காக்கும் கரங்கள் நற்பணி மன்ற செயலாளர் கண்ணன் வரவேற்றார். இந்த முகாமில் கிருஷ்ணன்கோவில் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவ அலுவலர் சுவாதி தலைமையில் செவிலியர்கள் சுமார் 120 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். அதில் 108 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். நகர தலைவர் ராம்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story