இலவச கண் சிகிச்சை முகாம்


இலவச கண் சிகிச்சை முகாம்
x

நெல்லையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பேட்டை ரூரல் ஊராட்சி சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் கோடீஸ்வரன்நகர், சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. முகாமிற்கு பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிஹரன் தலைமை தாங்கினார். ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னதுரை வரவேற்றார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ. முகாமை தொடங்கி வைத்தார்.

மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், துணை தலைவர் நைனா முகமது, நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி, தச்சை மண்டல தலைவர் ரேவதி பிரபு பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் டாக்டர் ஹரி வன்சன், முதன்மை முகாம் மேலாளர் மாணிக்கம், பஞ்சாயத்து உறுப்பினர் ஆறுமுகம், வக்கீல் ஜாகீர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வார்டு உறுப்பினர் முருகன் நன்றி கூறினார்.


Next Story