இலவச கண் சிகிச்சை முகாம்


இலவச கண் சிகிச்சை முகாம்
x

சேரன்மாதேவி அருகே கூனியூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவியை அடுத்த கூனியூர் சமுதாய நலக்கூடத்தில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அகர்வால் கண் மருத்துவமனை, நண்பர்கள் ரத்ததான குழு, டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை, அப்பல்லோ பார்மசி சார்பில், கண்தான விழிப்புணர்வு மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. டி.வி.எஸ் கள இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி முன்னிலை வகித்தார். கிருஷ்ணன், முருகன் வரவேற்று பேசினர்.

அகர்வால் கண் மருத்துவமனை ஜெகதீஸ், முகாம் மேலாளர் மாணிக்கம் கண்தானத்தின் அவசியம் குறித்து விளக்கி கூறினர். கூனியூர் பஞ்சாயத்து துணை தலைவர் சுப்பிரமணியன், தொ.மு.ச கணேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அப்பல்லோ பார்மசியினர் இலவச ரத்த அழுத்த பரிசோதனை செய்தனர். அகர்வால் மருமத்துவமனை தென்மண்டல இயக்குனர் லயனல் ராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை அகர்வால் முதன்மை முகாம் மேலாளர் மாணிக்கம், டி.வி.எஸ் சேவைகள் அறக்கட்டளை வீரக்குமார், கூனியூர் கிருஷ்ணம்மாள் நினைவு அறக்கட்டளை குமரேசன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story