இலவச கண் சிகிச்சை முகாம்


இலவச கண் சிகிச்சை முகாம்
x

நாகையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை, வெளிப்பாளையம், ஏழைப் பிள்ளையார் கோவில் அருகில் மீனாட்சி கண் ஆஸ்பத்திரி திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச கண்சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெறுகிறது. முகாமில் கண்புரை, தூரப்பார்வை, கிட்டப்பார்வை, கருவிழி நோய், கண்சதை, சர்க்கரை கண் விழித்திரை நோய், கண்பிரசர் ஆகிய நோய்களுக்கு தகுந்த பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேலும் கண் கண்ணாடிக்கு சிறப்பு தள்ளுபடியாக 10 சதவீதம் வழங்கப்படுகிறது.


Related Tags :
Next Story