இலவச கண் சிகிச்சை முகாம்


இலவச கண் சிகிச்சை முகாம்
x

விக்கிரமசிங்கபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன், அகர்வால் கண் மருத்துவமனை கண் மருத்துவ கல்வி நிறுவனம், நெல்லை அப்பலோ பார்மசி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் விக்கிரமசிங்கபுரத்தில் இலவச கண் சிகிச்சை மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயின் அளவுகள் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் லயனல் ராஜ் தலைமையிலான தலைமை குழு முகாம் மேலாளர் மாணிக்கம் தலைமையில் விழி ஒளி ஆய்வாளர் சிஞ்சு இந்திர சுந்தரி ஆகியோர் கண் பரிசோதனைகளை செய்தனர்.

மேலும் இம்முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கண்டறியபட்டது. இதில் மாவட்ட மருத்துவ அணி தலைவர் சாதிக், துணை தலைவர் அனஸ், முகைதீன் மீரான், பாலசுப்பிரமணியன், அருண் மற்றும் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story