இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி
தென்னடார் ஊராட்சியில் இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி நடந்தது
வாய்மேடு:
நாகை மாவட்டம் தென்னடார் ஊராட்சியில் நாம்கோ தொண்டு நிறுவனம் நபார்டு உதவியுடன் இலவச ஆடு வளர்ப்பு பயிற்சியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு தென்னடார் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசெந்தில் தலைமை தாங்கினார். இதில்
நாகப்பட்டினம் கால்நடை பயிற்சி- ஆராய்ச்சி நிறுவன டாக்டர் சுரேஷ் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் ராஜாராம், அமுதா, ராஜசேகர், அன்பரசன், நுண்கடன் ஆலோசகர் அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தொண்டு நிறுவன இயக்குனர் ஜீவானந்தம் பேசுகையில், 10 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சியில் ஆடு மாடு வளர்ப்பு, பாலில் இருந்து உபபொருட்கள் தயாரிக்கின்ற முறைகள், கால்நடை தீவனம் தயாரிக்கும் முறை, மண்புழு உரம் தயாரிக்கும் முறை ஆகியவை செய்முறை பயிற்சிகளாக வழங்கப்படும். 150 பேருக்கு பயிற்சி முடித்த பின் ஒரத்தநாடு கால்நடை பல்கலைக்கழகத்திற்கு ஒரு நாள் பயிற்சியாக அழைத்து செல்லப்படுவார்கள். கடனுதவி ஏற்பாடு செய்து தரப்படும் என்றார். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் மணியம்மாள் வரவேற்றார். முடிவில் தமிழரசி நன்றி கூறினார்.