பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்


பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்
x

நாங்குநேரி யூனியன் அம்பலம் கிராமத்தில் பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் அரியகுளம் பஞ்சாயத்து அம்பலம் கிராமத்தில் தமிழக அரசின் ஊரக ஏழ்மை நிலைமையில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் தலா 5 ஆடுகள் வழங்கி, தொழில் முனைவோராக உருவாக்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அரியகுளம் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி வசந்தகுமார், கால்நடை உதவி இயக்குனர்கள் ரகுமத்துல்லா, தங்கராஜ், கால்நடை மருத்துவர்கள் கணேசன், தண்டபாணி, டி.வி.எஸ். கள இயக்குனர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* மன்னார்புரத்தில் சேவை மைய ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. சேவை மைய நிறுவனர் ஒன்றிய கவுன்சிலர் கீதராஜ் வரவேற்றார். நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா எட்வின் தலைமை தாங்கி பரிசுகள் வழங்கி பேசினார். சங்கனாங்குளம் பஞ்சாயத்து தலைவர் சின்னதம்பி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர் கருணாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். வக்கீல் அஜித் கீதன் நன்றி கூறினார்.


Next Story