இலவச இருதய பரிசோதனை முகாம்


இலவச இருதய பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம்-நாளை நடக்கிறது

தென்காசி

குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம், சக்தி ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை ஆகியன இணைந்து செங்கோட்டை பொது நூலகத்தில் (எஸ்.எம்.எஸ்.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர்புறம்) நாளை (ஞாயிற்றுக்கிழமை) குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் நடத்துகின்றன. காலை 9-30 மணி முதல் மதியம் 1-30 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில், பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் எக்கோ கார்டியாக் டாப்ளர் ஸ்கேன் முறையில் இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. மூச்சுத்திணறல், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், குறைவான உணவு உட்கொள்ளல், குழந்தையின் மேனி நீல நிறம் மாறுதல், அதிகப்படியாக வியர்த்தல், நடுக்கம், நினைவு இழத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் இந்த முகாமிற்கு அழைத்து வரலாம்.

முகாமில் அறுவை சிகிச்சை தேவை என கண்டறியப்படும் குழந்தைகளுக்கு சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் அறுவை சிகிச்சை அளிக்கப்படும். வரும்போது குழந்தையின் பழைய மருத்துவ அறிக்கைகளையும் கொண்டு வர வேண்டும்.

இத்தகவலை இந்த திட்டத்தின் தலைவர் முன்னாள் ரோட்டரி கவர்னர் ஷாஜகான் தெரிவித்தார்.


Next Story