இலவச வீட்டுமனைப்பட்டாவை சரி செய்து வழங்க வேண்டும்
இலவச வீட்டுமனைப்பட்டாவை சரி செய்து வழங்க வேண்டும்
திருப்பூர்
அவினாசி அருகே தெக்கலூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'எங்கள் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 185-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். நாங்கள் இருக்கும் இடத்துக்கு இலவச வீட்டுமனைப்பட்டா ஏற்கனவே வழங்கப்பட்டது. ஆனால் அதில் பட்டா வரிசை எண் சிலருக்கு மாற்றமாக இருந்தது.
இதைத்தொடர்ந்து பட்டா மாறுதல் செய்து முறைப்படுத்திக் கொடுக்க மனு அளிக்கப்பட்டது. வருவாய்த்துறையினர் மூலமாக ஆய்வு செய்து எங்களுக்கு பட்டா தயாராகி நிலையில், எங்களிடம் அதிகாரிகள் பணம் கேட்பதாக தவறான வதந்தி கிளம்பியுள்ளது. அதன்காரணமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எங்களிடம் யாரும் பணம் கேட்கவில்லை. இதை சரி செய்து எங்களுக்கு தயாரான பட்டாவை வழங்கி உதவ வேண்டும்' என்று கூறியுள்ளனர்.