வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச நேரடி பயிற்சி
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு வருகிற 27-ந் தேதி முதல் இலவச நேரடி பயிற்சி நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு வருகிற 27-ந் தேதி முதல் இலவச நேரடி பயிற்சி நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பணியிடங்களுக்கான தேர்வு
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறியதாவது:-
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் 2023-ம் ஆண்டிற்கான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை பிரிவு) பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது. தேர்வு எழுத விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது உச்சவரம்பு 30 வயது ஆகும்.
அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு அதற்கான இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக வருகிற 27-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
இணையதளம்
இத்தேர்வுக்கான நேரடி பயிற்சி பெற விரும்புபவர்கள் இதற்கான இணையதளத்தில் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.