இலவச மருத்துவ முகாம்
இலவச மருத்துவ முகாம்
சிவகங்கை
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள வடக்கு விசவனூர் கிராமத்தில் இலவச ஆம்புலன்ஸ் வழங்கும் விழா மற்றும் இலவச கண் சிகிச்சை, மருத்துவ முகாம் நடைபெற்றது. நீதிபதி ராமசுவாமி தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் கண் நோய் சம்பந்தமான நோய்களுக்கு அப்போலோ மருத்துவமனை, அகர்வால் மருத்துவமனை மருத்துவர்கள் நடத்திய முகாமில் வடக்கு விசவனூர் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மேலும் வடக்கு விசவனூர் கிராமத்தில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் சேவையை இலவசமாக கிராம மக்களுக்கு வழங்கி நீதியரசர் ராமசாமி பேசினார்.
Related Tags :
Next Story