இலவச மருத்துவ முகாம்


இலவச மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் மறைமாவட்ட குடும்ப நலப்பணி குழு சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மறைமாவட்ட குடும்பம் மற்றும் நலப்பணி குழு, திண்டுக்கல் புனித வளனார் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச பொது மருத்துவ முகாமை திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பங்கு ஆலய வளாக பள்ளியில் நடத்தியது. இதனை குடும்ப நலப்பணி குழு செயலர் பாதிரியார் மரியலூயிஸ் தொடங்கி வைத்தார். இயற்கை மருத்துவர் அந்தோணிதாஸ் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் ஜோனத்தன், பிரியங்கா ஆகியோர் மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். இதில் ரத்தத்தில் உள்ள பிராணவாயு, சர்க்கரை, ரத்த கொதிப்பு, ரத்த அழுத்தம், எக்கோ மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள், அதிக உடல் பருமன் உட்பட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன. இந்த மருத்துவ முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நலப்பணிக்குழு நிர்வாகிகள், புனித வளனார் மருத்துவமனை மக்கள் தொடர்பாளர் தெய்வீக பிரியா ஆகியோர் செய்து இருந்தனர்.



Next Story