இலவச மருத்துவ முகாம்
இலவச மருத்துவ முகாம் நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சிந்தாமணி அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. சிந்தாமணி பஞ்சாயத்து தலைவர் எம்.ஜேசு மிக்கேல் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் மீனா சுப்பையா, பங்குத்தந்தை மெரிஷ் லியோ, பஞ்சாயத்து துணைத்தலைவர் தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துலட்சுமி, டாக்டர்கள் சித்தார்த்தன், கிருத்திகா ஆகியோர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை நாங்குநேரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அய்யப்பன், சுகாதார ஆய்வாளர் ராபின்ஸ்டன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story