மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
பாவூர்சத்திரத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் பாவூர்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வரும் கீழப்பாவூர் வட்டார வளமையத்தில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கீழப்பாவூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தர்மராஜ் வரவேற்றார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரகுமார் மற்றும் கீழப்பாவூர் வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணபாரதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ஆசிரியர் பயிற்றுனர் செல்வமீனாட்சி நன்றி கூறினார்.
மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர். முகாமில் 100 மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அலுவலர் ஜெயபிரகாஷ் கலந்துகொண்டு மாற்றுத்திறன் மாணவர்கள் 9 பேருக்கு அடையாள அட்டை, 3 நபர்களுக்கு மடக்கு சக்கர நாற்காலி மற்றும் முடநீக்கியல் சாதனம் ஒருவருக்கும் வழங்கினார்.