மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்
x

காட்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

வேலூர்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து இலவச சிறப்பு மருத்துவ முகாம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

முகாமில் பிறப்பு முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களும், 52 ஊராட்சிகளில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட பொதுமக்களுக்கும் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.

இந்த முகாமில் தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குதல், தேவையான மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல், படிப்பு உதவித்தொகை விண்ணப்பித்தல், பஸ் பயண அட்டை, ரெயில் பயண அட்டை மற்றும் 18 துறைகள் மூலம் உதவிகள் வழங்குவதற்காகவும் நடந்தது.

முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் கே.எம்.ஜோதிஸ்வர பிள்ளை, காட்பாடி இடர்பாடு நிவாரண தாசில்தார் வேண்டா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.மகேஸ்வரி, காட்பாடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சாமுண்டீஸ்வரி, ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story