மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
x

ஜோலார்பேட்டையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்து கொண்டு 32 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் மற்றும் உதவி உபகரணங்களை வழங்கினார். முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மாரிமுத்து, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், நகராட்சி ஆணையர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story