மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
x

திமிரி அரசு பள்ளியில் இணைய வழி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக இணைய வழியை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில் நிதி நிறுவன மோசடி, போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி, போலி கடன் செயலி மற்றும் சைபர் க்ரைம் உதவி எண் 1930 இணையதளம் முகவரி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்தல், சரியான தொடுதல் மற்றும் தவறான தொடுதல் பற்றியும், அவ்வாறு நடைபெற்றால் யாரை அணுக வேண்டும் என்ற விவரமும் விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story