இலவச மருத்துவ முகாம்- நலத்திட்ட உதவி


இலவச மருத்துவ முகாம்- நலத்திட்ட உதவி
x

நெல்லை ஷிபா மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்- நலத்திட்ட உதவி

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை ஷிபா மருத்துவமனையின் நிறுவனர் எம்.கே.முகம்மது உசைன் சாகிப் நினைவாக இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முகாமில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள எக்ேகா, ஈ.சி.ஜி., ரத்தத்தில் சர்க்கரை அளவு, யூரிக் அமிலம், எலும்பு தாது அடர்த்தி, நுரையீரல் பரிசோதனை போன்றவை செய்யப்பட்டது. மேலும் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவா்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அதனை தொடர்ந்து கைலாசபுரம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் சுமார் 400 பேருக்கு இலவச நலத்திட்ட உதவிகளை ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் எம்.கே.எம்.முகம்மது ஷாபி, மருத்துவ இயக்குனர் டாக்டர் முகம்மது அரபாத் ஆகியோர் வழங்கினார்கள். முகாமில் மருத்துவர்கள் ராமசுப்பிரமணியன், இப்ராகிம், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின் மார்க்கெட்டிங் பிரிவினர் செய்திருந்தனர்.

இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் முகம்மது ஷாபி கூறுகையில், "ஜூன் 10-ந் தேதி ஷிபா மருத்துவமனையின் நிறுவனர் தினம் நினைவாக மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் தொடரும்" என்றார்.


Next Story