அரசு பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு இலவச நீட் பயிற்சி
அரசு பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு இலவச நீட் பயிற்சி அளிக்கப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் இருந்து தகுதி தேர்வு நடத்தி அதில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் 50 பேருக்கு கடந்த 1 மாதமாக அரசன் கல்வியியல் கல்லூரியில் இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் செய்திருந்தார். இந்த பயிற்சி வகுப்பில் நீட் மாதிரி தேர்வுகள் 5 நடத்தப்பட்டு மாணவர்களுக்கு தேர்வு அச்சம் போக்கப்பட்டது. பயிற்சியின் நிறைவு விழாவில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு நீட் தேர்வை, மாணவர்கள் எப்படி நுணுக்கத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசன் கல்விக்குழுமத்தின் இயக்குனர் நளினிஅசோகன், அரசன் மாடல் பள்ளி இயக்குனர் பிரியங்கா கணேஷ்குமார், அரசன் மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குனர் அர்ச்சனா கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக அரசன் மாடல் பள்ளியின் முதல்வர் அறிவரசு வரவேற்றார். முடிவில் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.