அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்


அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம்

பரமக்குடி,

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு பரமக்குடி அருகே உள்ள பாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இலவச நோட்டு புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பால் கண்ணன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய அணி துணைச்செயலாளர் பாம்பூர் இருளன் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story