இலவச கண் மருத்துவ முகாம்
சிவகங்கை
திருப்புவனம்,
திருப்புவனம் ஒன்றியம் நயினார்பேட்டை கிராமத்தில் தி.மு.க. ஒன்றிய மாணவரணி சார்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வேலம்மாள் மருத்துவக்கல்லூரி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமை திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தொடக்கி வைத்து பேசினார்.. முகாமில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பையா, ஈஸ்வரன், பேரூராட்சி துணைத்தலைவர் ரகமத்துல்லாகான், ஒன்றிய நிர்வாகிகள் சுப்பிரமணியன், சேகர், மகேந்திரன், இளங்கோவன், நகர் நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், ஆறுமுகம், பாலகிருஷ்ணன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story