இலவச கண்சிகிச்சை பிரிவு தொடக்கம்
திண்டுக்கல் அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது.
திண்டுக்கல்லில், தாடிக்கொம்பு சாலையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் இலவச கண்சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி கிம் பங்கேற்று, இலவச சிகிச்சை பிரிவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றிவைக்கப்பட்டது.
இதில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் விக்னேஷ்வர், டாக்டர்கள் ரேகா, சங்கவிபார்த்திபன், பிரீத்தி சிங்காரவேல் மற்றும் தலைமை செவிலியர்கள் சுமதி, நாகலெட்சுமி, மரியசுகந்தி, அபிராமி, கலைச்செல்வி, கனிமொழி, கணக்காளர்கள் அஞ்சு, ஷர்மிளா, ரோஸ்லின் ஜெனித்மேரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேலாளர் பாலசுப்பிரமணி செய்திருந்தார். மேலும், திண்டுக்கல் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், பல்வேறு பகுதிகளில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வெளிநோயாளிகள் 80 ஆயிரத்து 569 பேருக்கும், உள்நோயாளிகள் 7 ஆயிரத்து 47 பேருக்கும் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.