இலவச பொது மருத்துவ முகாம்
கோபாலசமுத்திரத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் மற்றும் நெல்லை அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை இணைந்து, நேற்று கோபாலசமுத்திரத்தில் இலவச பொது மருத்துவ முகாமை நடத்தியது. கிராம உதயம் நிர்வாக இயக்குனர் சுந்தரேசன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி வரவேற்று பேசினார்.
அல் ஷிபா மருத்துவமனை பொது நல மருத்துவர் ஏசுபிரியா தலைமையிலான குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். அல் ஷிபா மருத்துவமனை மேலாளர் முகமது முஸ்தபா வாழ்த்தி பேசினார். முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் குமாரி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story