விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்


விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வட்டாரத்தில் தமிழ்நாடு அரசு பசுமை போர்வை இயக்கத்தின் படி மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கோவில்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வன மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தலைமையில், துணை இயக்குனர் பழனி வேலாயுதம், உதவி இயக்குனர் நாகராஜன் ஆகியோர் விவசாயிகளுக்கு எக்டருக்கு 160 எண்ணம் மரக்கன்றுகளும், தனி பயிராக 500 மரக்கன்றுகளையும் வழங்கினார்கள்.

வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் கூறுகையில், "கோவில்பட்டி வட்டாரத்திற்கு இந்த ஆண்டு இலக்குப்படி 23 ஆயிரத்து 141 எண்ணம், செம்மரம், மலைவேம்பு, வேங்கை, தேக்கு, மகாகனி, புங்கம் புலி, பெரும் நெல்லி, நாவல் ஆகிய மரக்கன்றுகள் வரப்பு பயிராக பயிரிட வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எக்டருக்கு வரப்பு பயிராக 160 மரக்கன்றுகளும், தனிப்பயிராக 500 மரக்கன்றுகளும் வழங்கப்படுகிறது" என்றார்.


Next Story