விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்
பசுமை போர்வை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது என வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
பசுமை போர்வை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது என வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இலவச மரக்கன்றுகள்
தமிழக அரசின் பசுமை போர்வை திட்டத்தின் கீழ் மரங்கள் வளர்ப்பதற்காக மகாகனி, தேக்கு, செம்மரம், வேங்கை மற்றும் இதர மரக்கன்றுகள் வேளாண்துறை மூலம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே மரங்கள் வளர்க்க விரும்பும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் தொலைபேசியில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் பதிவு செய்யவேண்டும்.
அடர் நடவு முறை
தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களை அணுகியும், பதிவு செய்தும் பெற்றுக்கொள்ளலாம். அடர் நடவு முறையில் எக்டேருக்கு 500 மரக்கன்றுகளும், வரப்புகளில் நடுவதற்கு எக்டேருக்கு 160 மரக்கன்றுகளும் நடலாம்.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.