மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் பயிற்சி
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் பயிற்சி தொடங்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர்
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் பயிற்சி தொடங்கப்பட்டது.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல் பயிற்சி தொடக்க விழா நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார். இந்த இலவச தையல் பயிற்சி 30 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 20 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு இலவச பயிற்சி, உபகரணங்கள், சீருடை, மதிய உணவு, தேநீர் வழங்கப்படும். பயிற்சி முடிந்த பிறகு மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். நேற்று நடந்த விழாவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜன், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் அரவிந்த்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story