இலவச சிறப்பு மருத்துவ முகாம்


இலவச சிறப்பு மருத்துவ முகாம்
x

இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைெபற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள முத்துராமலிங்கபுரம் காலனியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மருந்து, மாத்திரைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜபாண்டியன், துணைத்தலைவர் லேகேஸ்வரி, வார்டு உறுப்பினர் பைபாஸ் வைரம், ஒன்றிய கவுன்சிலர் கலைமணி, தி.மு.க. நிர்வாகி உசிலை தங்கராம், ஆலாவூரணி வெங்கடேசன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைரக்குமார், பஞ்சாயத்து செயலாளர் முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பொதுமருத்துவம், சிறப்பு மருத்துவம், சித்த மருத்துவம், பல், கண், இருதய நோய் மருத்துவம், ஆய்வக பரிசோதனைகள், இ.சி.ஜி., கர்ப்ப வாய் புற்றுநோய் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 741 பேர் கலந்து கொண்டு பல்வேறு பரிசோதனைகளை செய்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறையை சேர்ந்த வீரபுத்திரன், விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story