ஆண்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாம்


ஆண்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாம்
x

வருகிற 21-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை ஆண்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாம் நடக்கிறது.

ராணிப்பேட்டை

மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் வருகிற 21-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவைல சிகிச்சை முகாம் நடக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை, அரக்கோணம் அரசு மருத்துவமனை, சோளிங்கர் அரசு மருத்துவமனையிலும் ஆண்களுக்கான இலவச நவீன கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.

இதனை குடும்பநலம் மற்றும் ஊரக நலப் பணிகள் துணை இயக்குனர் மணிமேகலை தெரிவித்தார்.


Next Story