1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள்
நீடாமங்கலம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வட்டாரக்கல்வி அலுவலர் வழங்கினார்
நீடாமங்கலம்:
கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், எண்ணும் எழுத்தும் பயிற்சி ஏடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வட்டாரக் கல்வி அலுவலர் ந.சம்பத் பாடநூல், குறிப்பேடுகளை வழங்கி, இக்கல்வி ஆண்டு, சிறப்பாக அமைந்து, மாணவர்கள் தரமான கல்வி பெற்றிட வாழ்த்தினார். நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 67 தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 4 ஆயிரத்து 673 மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், குறிப்பேடுகள், எண்ணும் எழுத்தும் பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டது. இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சத்தியா, பள்ளி தலைமை ஆசிரியை உமா மற்றும் உதவி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அதேபோன்று வட்டாரக்கல்வி அலுவர் சு.முத்தமிழன் காளாஞ்சிமேடு, வடக்கு தெற்கு சோத்திரியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்கள், குறிப்பேடுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.