போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு


போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
x

தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 1-ந்தேதி நில அளவர், வரைவாளர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.

தஞ்சாவூர்


தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 1-ந்தேதி நில அளவர், வரைவாளர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.

இலவச பயிற்சி வகுப்பு

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நில அளவர், வரைவாளர், அளவர், உதவி வரைவாளர் உள்ளிட்ட 1089 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்குதி டிப்ளமோ சிவில், ஐ.டி.ஐ. சர்வேயர், ஐ.டி.ஐ. வரைவாளர் முடித்திருக்க வேண்டும். இந்த தேர்வு நவம்பர் மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது.இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும்வட்டத்தின் வாயிலாக வருகிற 1-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி நடத்தப்படுகிறது. அன்றையதினம் தேர்வுக்கு தயார் செய்யும் விதம், தேர்வுக்கான பாடக்குறிப்புகள், தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

பெயரை பதிவு செய்யலாம்

மேலும் தொடர்ந்து இந்த பயிற்சி வகுப்பானது அனுபவிமிக்க சிறப்பு வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித்தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. எனவே போட்டித்தேர்வுக்கு தயாராகும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதியினை 8110919990 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்பிபெயரை பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story