இலவச கால்நடை சிகிச்சை முகாம்
இலவச கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்
இலவச கால்நடை சிகிச்சை முகாம்பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழமாத்தூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு டாக்டர் செல்வகுமார் தலைமை தாங்கினார். முகாமில் மருத்துவ குழுவினர் சினைப்பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, தாது உப்பு கலவை வழங்குதல் ஆகிய பணிகளை செய்தனர். முகாமில் சிறந்த கிடேரி கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பாக கால்நடைகளை வளர்த்து அதிக பால் உற்பத்தி செய்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இம்முகாமின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன் பெற்றன.
Related Tags :
Next Story