2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் நன்கொடையாளர்கள் சார்பில் ஏழை-எளிய மணமக்களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நேற்று இலவச திருமணங்கள் நடந்தது. இதில் பழனி அருகே உள்ள பொருளூரைச் சேர்ந்த லோகநாதன்-கோமதி மற்றும் திண்டுக்கல் அடியனூத்தை சேர்ந்த வெங்கடேஷ்-காயத்ரி ஆகிய 2 ஜோடிகளுக்கு கோவில் நிதியில் இருந்து தலா 2 கிராம் தங்க தாலி வழங்கப்பட்டு இலவச திருமணங்கள் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து இலவச திருமணம் செய்து கொண்ட மணமக்களுக்கு பீரோ, கட்டில், மெத்தை உள்பட பல்வேறு வகையான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. இதில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story