சரக்கு ஆட்டோ மோதி தாய்-2 குழந்தைகள் படுகாயம்
சரக்கு ஆட்டோ மோதி தாய்-2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்,
நொய்யல்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் காட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவரது மனைவி சங்கீதா (28). இந்த தம்பதிக்கு பிரனீத் (11) என்ற மகனும், கனிஷ்கா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சங்கீதா தனக்கு சொந்தமான மொபட்டில் பிரனீத், கனிஷ்கா ஆகியோரை அழைத்து கொண்டு நொய்யலில் உள்ள தனது கணவர் மணிகண்டனை பார்ப்பதற்காக வந்து கொண்டிருந்தார். புகழூர் வாய்க்கால் அருகே வந்து கொண்டிருந்தபோது, கட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ, சங்கீதா ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட சங்கீதா, பிரனீத், கனிஷ்கா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சந்திரன் மீது வழக்குப்பதிந்து, அந்த சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.