மாமல்லபுரத்தில் உற்சாகமாக தீபாவளி கொண்டாடிய பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள்..!
மாமல்லபுரத்தில் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக தீபாவளி கொண்டாடினர்.
சென்னை,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையே புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாமல்லபுரத்துக்கு வந்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள், அங்கு ஒட்டலில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடினர். மாமல்லபுரத்திற்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து 5 பெண்கள் சுற்றுலா வந்துள்ளனர். அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்துவிட்டு, தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அவர்கள் தங்கி உள்ளனர்.
தீபாவளியை கொண்டாடும் வகையில், மாமல்லபுரம் தெருக்களில் பிரான்ஸ் நாட்டு பெண்கள் 5 பேரும் பட்டாசு வெடித்தும், புஸ்வானம், சுறுசுறு கம்பி கொளுத்தியும் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.