மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் சாவு


மோட்டார்சைக்கிளில் இருந்து  கீழே விழுந்தவர் சாவு
x

நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்

திருநெல்வேலி

மானூர்:

தூத்துக்குடி மாவட்டம் பூபால்ராயர்புரத்தில் பெந்தேகோஸ்தே சபை வைத்து ஊழியம் செய்து வருபவர் சாமுவேல் (வயது 30). இவர் நெல்லை மாவட்டம் மானூர் அருகேயும் ஒரு பெந்தேகோஸ்தே சபையை நடத்தி வருகிறார்.

கடந்த 25-ந்தேதி மானூர் பகுதியிலுள்ள சபையில் ஊழியம் செய்வதற்காக, பூபால்ராயர்புரத்தைச் சேர்ந்த கென்னடி (45) என்பவரை தனது மோட்டார்சைக்கிளில் அழைத்து வந்தார். மானூர் அருகேயுள்ள வெங்கலப்பொட்டலைச் சேர்ந்த இமானுவேல் (52) மோட்டார்சைக்கிளில் ஏற்றி வந்துள்ளார்.

ரஸ்தா பகுதியில் வந்தபோது, ஒரு நாய் குறுக்கே வந்தது. இதனால் நிலை தடுமாறி மூவரும் ேமாட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் காயம் அடைந்த 3 பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் கென்னடி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மானூர் போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.


Next Story