பெங்களூருவில் இருந்து கோவில்பட்டிக்கு லோடு வேனில் ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள்கடத்தல்; 3 பேர் கைது


தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து கோவில்பட்டிக்கு லோடு வேனில் ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள்கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

பெங்களூருவில் இருந்து கோவில்பட்டிக்கு லோடு வேனில் ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்திய 3பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் வாகன சோதனை

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் உத்தரவின் பேரில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்

சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் கோவில்பட்டி- சாத்தூர் ரோடு சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

புகையிலை பொருட்கள்

அந்த லோடுவேனில் இருந்த 16 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சமாகும். இதை தொடர்ந்து வேனில் இருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள், நாங்குநேரி கூந்தங்குளத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 27), வேன் டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கடப்பட்டு பகுதியைச் சேர்ந்த காசி மகன் நாகராஜ் (26), கூந்தங்குளத்தை 19 வயது வாலிபர் என தெரிய வந்தது.

3பேர் கைது

விசாரணையில், அவர்கள் பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கோவில்பட்டி பகுதிக்கு அவர்கள் கடத்தி வந்ததாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 மூட்டைகளில் இருந்த புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story