பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறப்பு


பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறப்பு
x

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

கீழ்பவானி வாய்க்கால்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 2 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில மாதங்களாக கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. எனினும் ஒரு சில இடங்களில் சீரமைப்பு பணிகள் நிறைவடையாமல் இருந்தன.

இந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்காக கடந்த 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 100 கன அடி என்ற அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதுவும் திறக்கப்பட்ட சில மணி நேரத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவடையாததால் தண்ணீர் நிறுத்தப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் தண்ணீர் திறப்பு

இதனிடையே சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால் கீழ்பவானி வாய்க்காலில் 19-ந் தேதி மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று பகல் 11 மணி அளவில் பவானிசாகர் அணையில் இருந்து மீண்டும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி வரை திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story