வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய சிறுவன் அரியலூரில் சிக்கினான்

வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய சிறுவன் அரியலூரில் சிக்கினான்
x

வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய சிறுவன் அரியலூரில் சிக்கினான்.

வேலூர்

வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய சிறுவன் அரியலூரில் சிக்கினான்.

வேலூர் காகிதப்பட்டறையில் அரசு பாதுகாப்பு இல்லம் அமைந்துள்ளது. இங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 சிறுவர்கள் தப்பிச்சென்றனர். அதில் 2 பேரை உடனடியாக போலீசார் பிடித்தனர். மற்ற 5 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தேடப்பட்டு சிறுவர்களில் ஒரு சிறுவன் அரியலூரில் போலீசாரிடம் சிக்கி உள்ளது வேலூர் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வேலூர் போலீசார் கூறுகையில், அரியலூரில் திருட்டு வழக்கு ஒன்றில் அங்குள்ள சிறுவன் ஒருவனை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அந்த சிறுவன் வேலூரில் இருந்து தப்பிய சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

Next Story