கம்பம் நகரில் இருந்து குமுளிக்குகூடுதல் டவுன் பஸ் இயக்க வேண்டும்:பொதுமக்கள் வலியுறுத்தல்


கம்பம் நகரில் இருந்து குமுளிக்குகூடுதல் டவுன் பஸ் இயக்க வேண்டும்:பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் நகரில் இருந்து குமுளிக்கு கூடுதல் டவுன் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

தேனி

கம்பம் நகரில் இருந்து கூடலூர், லோயர்கேம்ப் வழியாக குமுளிக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 5 பஸ்கள் குமுளிக்கு சென்று வருகின்றன. இந்த பஸ்களில் கம்பம், கூடலூர், லோயர்கேம்ப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சென்று வந்தனர். இந்த பஸ்கள் பெண்கள் கல்லூரி, அப்பாச்சி பண்ணை, கூலிக்காரன் பாலம், கருணாநிதி காலனி, தம்மணம்பட்டி பிரிவு, பகவதி அம்மன் கோவில், புதுரோடு, லோயர் காலனி ஆகிய பஸ் நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பயன் அடைந்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது கடந்த சில மாதங்களாக கம்பம் நகரில் இருந்து குமுளிக்கு சென்ற டவுன் பஸ்களில் 2 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் விவசாயிகள், கூலித்தொழிலாளர்களை ஏற்றுவது இல்லை. குமுளிக்கு வரும் டவுன் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பயணிகள் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. எனவே கம்பம் நகரில் இருந்து குமுளிக்கு வழக்கம் போல் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story