கன்னியாகுமரியில் இருந்து அந்தியூருக்குகுதிரை சவாரி செய்த 6-ம் வகுப்பு மாணவன்


கன்னியாகுமரியில் இருந்து அந்தியூருக்குகுதிரை சவாரி செய்த 6-ம் வகுப்பு மாணவன்
x

கன்னியாகுமரியில் இருந்து அந்தியூருக்கு குதிரை சவாரி செய்த 6-ம் வகுப்பு மாணவன்

ஈரோடு

ஈரோடு தெற்குப்பள்ளம் தி பி.வி.பி. பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவன் செ.மானவ் சுப்பிரமணியன் (வயது 11). இவர் தன்னுடைய குதிரை ஏற்ற பயிற்சியாளர் கவுதம் வெற்றி கண்ணன் மேற்பார்வையில் இந்திய ரக குதிரையில் கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய சாகச குதிரை சவாரியை தொடங்கினார். விஜய்வசந்த் எம்.பி. பயணத்ைத தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரியில் இருந்து குதிரை சந்தை நடைெபறும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசாமி கோவில் வரை சுமார் 482 கிலோ மீட்டர் தூரம் மாணவன் செ.மானவ் சுப்பிரமணியன் குதிரையில் சவாரி செய்தார். இந்த சாதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, அயர்ன் ஸ்பீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சாதனை படைத்த மாணவன் செ.மானவ் சுப்பிரமணியனை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. மற்றும் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story