கொல்கத்தாவில் இருந்து திருவாரூருக்கு 19½ லட்சம் சாக்குகள்
கொல்கத்தாவில் இருந்து சரக்கு ரெயிலில் திருவாரூருக்கு நெல் கொள்முதல் பணிக்காக 19½ லட்சம் சாக்குகள் வந்தது.
கொல்கத்தாவில் இருந்து சரக்கு ரெயிலில் திருவாரூருக்கு நெல் கொள்முதல் பணிக்காக 19½ லட்சம் சாக்குகள் வந்தது.
சம்பா, தாளடி சாகுபடி
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதனால் குறுவை, சம்பா, தாளடி மற்றும் கோடை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
அறுவடையின் போது நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் நிலையங்கள் மாவட்டம் முழுவதும் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் சாக்கு என்பது அத்தியாவசிய தேவையாக இருந்து வருகிறது.
நெல் அறுவடை பணி
தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெறும் நிலையில் நெல் கொள்முதல் நிலையம் மூலம் பணியின் போது சாக்கு தட்டுபாடு இன்றி வழங்கிட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ெகால்கத்தாவில் இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு தேவையான சாக்குகள் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து மேற்குவங்கத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 3,960 பண்டல் சாக்குகள் திருவாரூருக்கு நேற்று வந்தது.
19 லட்சத்து 50 ஆயிரம் சாக்குகள்
இதில் பண்டலுக்கு 500 சாக்குகள் வீதம் 19 லட்சத்து 50 ஆயிரம் சாக்குகளை லாரிகள் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது.
இங்கிருந்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவைக்கு ஏற்ப சாக்குகள் அனுப்பி வைக்கப்படும் என நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.